மாணவர்களுக்கு மினி ஜெராக்ஸ் அச்சு செய்த கடைக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

 
ச்

நெல்லையில் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் பிட் அடிக்க மினி ஜெராக்ஸ் தயார் செய்து கொடுத்த ஜெராக்ஸ் கடைக்கு சென்ற சிஇஓ எச்சரிக்கை விடுத்தார்.

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இன்று காலையில் பொது தேர்வு தொடங்கி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் எழுதுவதற்காக 73 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 28 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 38 அரசு உதவி பெறும் பள்ளிகள், 7 மெட்ரிக் பள்ளிகள் என 73 மையங்களில் தேர்வுகள் நடைபெற தொடங்கியது. மொத்தமாக 8791 மாணவர்கள, 11044 மாணவிகளும் இந்த பொதுத்தேர்வில் எழுதினர். அது மட்டுமல்லாமல் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை ஒரு சிறப்பு மையமாகவும் அங்கும் சிறை கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். தனித் தேர்வர்களுக்காக 10 மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் 1440 அரை கண்காணிப்பாளர்களும் 150 பேர் கொண்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினரும் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்காக நெல்லை நகர் பாளையங்கோட்டை பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் காலை முதல் மாணவ மாணவிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களது தேர்வு அறைகளை  கண்டறிந்து சென்றபின் அவர்களது ஹால் டிக்கெட் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தேர்வு அறைக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 


நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றை திடீரென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் மாணவர்கள் தேர்வு எழுதிய அறையில்  ரைடு செய்தனர். அப்பொழுது 2 மாணவர்களிடம் பிட் அடிப்பதற்காக கொண்டு வந்த மினி ஜெராக்ஸ் இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்து மாணவர்களுடன் எங்கு இதை மினி ஜெராக்ஸ் எடுத்தீர்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் மினி ஜெராக்ஸ் எடுத்ததை மாணவர்கள் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்ட மினி ஜெராக்ஸ் கிடைக்கும் நேரடியாக சென்று இனிமேல் இதேபோல் மாணவர்களுக்கு மினி ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.