ரூ.156 ஆட்டோ கட்டணத்திற்கு ரூ.15,682 அனுப்பிய சிஇஓ! திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!
மும்பையைச் சேர்ந்த ஹிங்லிஷ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஷுபம் குனே, ஒரு ஆட்டோ பயணத்திற்குப் பணம் செலுத்தும் போது தவறுதலாக எண்ணியதை விட அதிகப் பணத்தை மாற்றியதால், பரபரப்பான ஒரு காலைப் பொழுது எப்படி எதிர்பாராத திருப்பத்தை அடைந்தது என்பதை லிங்க்ட்இன் பதிவு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஒரே ஒரு நாள் மட்டும் நகரத்தில் தங்கியிருந்த ஒரு சர்வதேச வாடிக்கையாளரைச் சந்திப்பதற்கான அவசரத்தில் அந்த நாள் தொடங்கியது. காலை 7 மணி சந்திப்பிற்குத் தாமதமாகிவிட்டதால், அவர் கட்டிடத்திற்கு வெளியே அவசரமாக கூகுள் பே-ஐத் திறந்து, ரூ.156 செலவான ஆட்டோ பயணத்திற்குப் பணம் செலுத்தினார்.இருப்பினும், அவசரத்தில், அவர் ரூ.156-க்கு பதிலாக தவறுதலாக ரூ.15,682-ஐ உள்ளிட்டு, உள்ளே விரைந்து செல்வதற்கு முன் பரிவர்த்தனையை முடித்துவிட்டார். அவர் பணம் செலுத்தும் திரையைக்கூட சரிபார்க்கவில்லை என்று கூறினார்.
நான் சந்திப்பதற்காக சென்ற சந்திப்பும் நடக்கவில்லை. எனவே அதிருப்தியுடன் திரும்பி வந்தபோது என்னை இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அவர் என்னை அணுகி நான் பணம் அதிகமாக செலுத்திவிட்டதாக கூறி நான் அனுப்பிய தொகை முழுவதையும் எனக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அவருக்கான ஆட்டோ கட்டணத்தை எடுத்துக்கொள்ளும்படி கூறினேன். அதனையும் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆட்டோ டிரைவருக்கு கொடுக்க வேண்டிய தொகை ரூ.156 மட்டுமேயாகும். அந்த தொகையை கூட ஆட்டோ டிரைவர் அல்தாப் எடுத்துக்கொள்ளவில்லை.
அதன் பிறகு ரூ.500 அனுப்பி வைத்ததாகவும் சுபம் குறிப்பிட்டுள்ளார். ஆட்டோ டிரைவரின் செயலை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இப்படியும் சில ஆட்டோ டிரைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

