தமிழகத்திற்கு ரூ.5,700 கோடியை விடுவித்தது மத்திய அரசு

 
modi cabinet

மாநிலங்களுக்கு மத்திய அரசின் வரி பகிர்வு பங்காக ரூ.1,39,750 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Image


தமிழ்நாட்டுக்கு ரூ.5,700 கோடியும், தெலுங்கானாவுக்கு ரூ.2,937 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.5,655 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,690 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.5,096 கோடியும் மத்திய அரசு விடுவித்தது. 5 மாநிலத்திற்கு சேர்த்து மொத்தம் ரூ.22,078 கோடியை விடுவித்துள்ள மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் ரூ.25,069  கோடியை விடுவித்துள்ளது.

இதேபோல் பீகாருக்கு ரூ.14,056 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.10,970 கோடி மாநிலங்களுக்கு வரிப் பகிர்வு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.