தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உறுதியேற்போம் - எல்.முருகன்

 
L Murugan

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும், நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற உறுதியேற்போம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களால், மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த, நமது தாமரைச் சொந்தங்கள் மிகுந்த உற்சாகமுடன் வரவேற்பளித்தார்கள். 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு, தேசம் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சிக்காகவும், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர் சக்தியை ஊக்குவிப்பதற்கும், நமது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களை, அனைத்து பாமர மக்களிடமும் சென்று சேரும் வண்ணம் உழைப்போம்.


நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்காக நமது அரசாங்கம் எடுத்துள்ள முன்னெடுப்புகளை முழுவதுமாக சென்று சேர்ப்போம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும், நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்கள் ஆட்சியமைப்பதற்கு உறுதியேற்போம். மேலும் நிகழ்ச்சியின் போது, வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும் நோக்கில், மக்களின் மனமறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தமிழக  @BJP4TamilNadu
,தேர்தல் அறிக்கைக்கான கருத்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.