மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வீரத்தை போற்றுவோம் - எல்.முருகன்

 
L Murugan

மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரத்துக்கு முந்தைய பாரதத்தில், வெள்ளையர்களை எதிர்க்க மாற்றுப் பாதை சிந்தித்ததோடு மட்டுமல்லாமல், “பாரத தேசிய இராணுவம்” ஒன்றை உருவாக்கி, தேசம் முழுவதும் உள்ள பல்வேறு சுதந்திர போராட்டக்காரர்களை, இராணுவ வீரராக்கிய பெருமைக்குரியவர். 


தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் “அய்யா நேதாஜி” அவர்களுக்கு சிலை வைத்தும், அவருடைய பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டியும், மரியாதை செலுத்துவதை பார்க்க முடிகிறது. மாவீரம் என்றால் என்ன என்று அன்றைய பாரத தியாகிகளுக்கு உதாரணமாய் திகழ்ந்த, மாவீரர் “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்” அவர்களின் பிறந்தநாளான இன்று, அவருடைய தியாகத்தைப் போற்றி, வீரத்தை வணங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.