தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது - எல்.முருகன்!

 
l murugan

தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

நாமக்கலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது. கடந்த 3 ஆண்டு கால திமுக அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற செய்து கொடுக்கவில்லை. 

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவினர் தீவிரமாக பணியாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். மக்கள் ஆதரவுடன் 3-வது முறையாக  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் என கூறினார்.