நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது - எல்.முருகன் குற்றச்சாட்டு

 
L Murugan

தமிழ்நாடு காவல்துறை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரில் என்ஐஏ நடவடிக்கை எடுத்தது. இதேபோல் சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. 

nia

இந்த் அநிலையில், தமிழ்நாடு காவல்துறை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக தெரிகிறது என கூறியுள்ள அவர்,  நாதக நிர்வாகிகள் தொடர்பான இடங்களில் என்.ஐ.ஏவின் சோதனைகள் முடிவடைந்த நிலையில், விரைவில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.