ஆந்திரா ரயில் விபத்து - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்

 
L.Murugan

ஆந்திர பிரதேசத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. பயணிகள் ரயில் மோதியதில்  பலாசா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறபடுகிறது. ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்த நிலையில், ஆந்திரா ரயில் விபத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திர பிரதேசத்தில், விஜயநகரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும்,  இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவர்களுக்கு கடவுள் வலிமை அளிக்கட்டும். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.