கண்டனத்திற்கு பணிந்த ஒன்றிய அமைச்சர் - கருத்தை திரும்ப பெற்றார்

தமிழக எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக மக்களவையில் பேசினார். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது . கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும் என கூறினார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் எனவும் பேசினார்.
இந்த நிலையில், தமிழக எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவித்தனர். தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான், கனிமொழி எம்.பி.யிடம் தெரிவித்தார்.