அதிகரிக்கும் கொரோனா - தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

 
corona

கொரோனா தொற்று பரவல் குறித்து கண்காணிப்பை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Delhi airport begins coronavirus testing for international departures -  India Today

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது, இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61-ஐ விட அதிகமாக உள்ளது. கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 200க்கு மேல் உள்ளது. இந்தியா முழுவதுமாக  கொரோனா தொற்றின் பாதிப்பு கூடிக்கொண்டே வரும்  நிலையில், மக்கள் உஷாராக இருந்து, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆங்காங்கே காய்ச்சல் முகாம்களும் நடைபெற்றுவருகின்றன.