தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி விடுவிப்பு - மத்திய அரசு
Aug 1, 2026, 15:18 IST1785577730312
தமிழ்நாட்டிற்கான ரூ.4,466 கோடி வாிப்பகிா்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு.
அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 28 மாநிலங்களுக்கான வாிப்பகிா்வு தொகையை மத்திய அரசு விடுத்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயரும் உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.19,208 கோடி பீகாருக்கு ரூ.10,845 கோடி மத்தியபிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில் வரிப்பகிர்வு தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு கூறியுள்ளது.

