ஆளுநர் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

 
rn ravi

தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மனுத்தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

rn ravi

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார். தமிழ்நாடு அரசு ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது எனத் தனது கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. விரைவில் மனுத்தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்த தவறால் அனைத்து ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம.  இதை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது