போப் ஆண்டவர் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

 
Central Govt Central Govt

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று காலமானார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் போப் ஆண்டவரின் உடல்நிலை பின்னடைவை அடைந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போப் ஆண்டவர் மறைவு காரணமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். உலக தலைவர்கள் பலரும் போப் ஆண்டவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும், நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழக அரசு சார்பில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.