தமிழக அரசின் அனுமதியில்லாமலேயே ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

 
ச் ச்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கியது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.

L&T Hydrocarbon Engineering bags offshore contract from state-owned ONGC -  Construction Week India

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கவுள்ளது. மாநில அரசு முடிவெடுக்காத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கீழ் வரும் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 2 ஆயிரம் மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் 20 சோதனை ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் அனுமதியே இல்லாமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது பாஜக அரசு. இன்னும் 7 மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே பாஜக அரசு களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.

முன்னதாக நேற்று சென்னை மற்றும் கன்னியாகுமரியில் ஆழ்கடல் பகுதிகளில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறும்பனை மீனவ கிராம மக்கள் கொளுத்தும் வெயிலில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.