புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும் - தர்மேந்திர பிரதான் பிடிவாதம்

 
pradhan

தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: கல்வியை அரசியலாக்க வேண்டாம். அரசியல் வேறுபாடுகளைக் கடந்த மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். தேசிய கல்வி கொள்கை - ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்பதே கிடையாது. தேசிய கல்விக் கொள்கையில் ஒரு மாநிலத்தில் மற்றொரு மொழியை திணிப்பது என்ற கேள்வியே கிடையாது. 

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம் கூட்டாட்சிக்கு எதிரானதாக உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக அமல்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. இந்திய கல்வியின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைந்ததுதான் சமக்ரா சிக்சா திட்டம். பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன என கூறினார்.