பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு

 
tn

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலமானார் . அவரது அரசியல் மற்றும் இலக்கிய பணிகளை போற்றும் விதமாக சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் தமிழக அரசு சார்பில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில்  நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்ற பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

tn

இந்த திட்டம் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைபடுவதாக இல்லை.  அத்துடன் சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதி இருந்தது.

tn

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.  இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்று அடுத்த கட்ட பணியை தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்திலிருந்து 560 மீட்டர் கடலில் பாலம் போன்ற அமைத்து இந்த பேனா நினைவுச் சின்னம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .