மக்கள்தொகை கணக்கெடுப்பு- 40 கேள்விகள் கேட்க மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் மிகப்பெரிய பணியான மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 (CENSUS OF INDIA 2027)-க்கான கேள்வித்தாள் தயார்தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பித்த உத்தரவு தான் இப்போது தமிழ்நாடு அரசிதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. Census Act, 1948 பிரிவு 8(1)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து கீழ்கண்ட 40 கேள்விகளை கேட்பார்கள் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது Household Schedule மூலம் சேகரிக்கப்படும். அதன்படி, 1. நபரின் பெயர், 2. குடும்பத் தலைவருடன் உறவு, 3. பாலினம், 4. பிறந்த தேதி மற்றும் வயது, 5. திருமண நிலை, 6. திருமண வயது, 7. துணைவர் பெயர், 8. தேசிய இனம், 9. மதம், 10. SC/ST/சாதி, 11. தந்தை விவரம், 12. தாய் விவரம், 13. மாற்றுத்திறனாளியா, 14. தாய்மொழி மற்றும் தெரிந்த மொழிகள், 15. கல்வியறிவு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு, 16. கல்வி நிறுவன வருகை, 17. உயர்கல்வி நிலை, 18. கடந்த ஆண்டு வேலை செய்தாரா, 19-25. பொருளாதார நடவடிக்கை, தொழில், பணி வகை, பிறப்பிடம், கடைசி வசிப்பிடம், இடம்பெயர்வு காரணம், 30. நிரந்தர வசிப்பிட முகவரி, 31-33. திருமணமான பெண்களிடம் - உயிருடன் உள்ள குழந்தைகள் எண்ணிக்கை, பிறந்த மொத்த குழந்தைகள், கடந்த ஓராண்டில் பிறந்த குழந்தைகள், 34. கோவிட்-19 தடுப்பூசி போட்ட இடம், 35. வங்கி கணக்குகளின் மொத்த எண்ணிக்கை
36. மொபைல் நம்பர் (இருந்தால்), 37. ஆதார் எண் (இருந்தால்), 38. வாக்காளர் அடையாள எண் (இருந்தால்), 39. பாஸ்போர்ட் எண் (இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருந்தால்), 40. ஓட்டுநர் உரிமம் உள்ளதா? இந்த 40 கேள்விகளுக்கும் பதில் சொல்ல மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதே இந்த அரசிதழின் நோக்கமாகும்.

