பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் செல்போனை கொடுத்தும், வாங்கியும் செல்கின்றனர்.

புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவில் நடை மூடிய பின்னர் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பேரூர் கோயில் ஊழியர்கள் வேல்முருகன், சாமிநாதன் ஆகிய இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று முதல் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்தான அறிவிப்பு பலகையும் கோயிலின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நுழைவு வாயில் அலுவலகம் அருகே உள்ள அறையில் தங்களது செல்போன்களை கொடுத்து அதற்கான டோக்கன்களை பெற்று செல்லலாம், சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் டோக்கனை கொடுத்து செல்போன்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையிலிருந்து வர துவங்கினர். பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால் செல்போனை கொடுத்துச் செல்லவும், கொடுத்தவர்கள் திரும்பி வாங்கிச் செல்லவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர். சாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தை விட செல்போனை வாங்கிச் செல்ல காத்திருக்கும் நேரம் அதிகமாக உள்ளது. முழுமையான ஏற்பாடுகளை செய்த பின்னரே இம்மாதிரியான புதிய நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் பக்தர்கள் கோரிக்க


