வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு தடை!!

 
tn

 நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிறது. 542 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை; காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

vote counting

அதன்பின் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்; நண்பகல் அளவில் முடிவுகள் தெரியவரும். ஆந்திரா, ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

election

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குச் சாவடி முகவர்களை மையத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐ-பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாக்குச்சாவடி முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பு அட்டை, 17சி நகல் ஆகியவற்றை கொண்டு செல்லலாம்.