சி.டி.ஆர். நிர்மல்குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்!

அதிமுகவில் இருந்து விலகிய ஐடி விங் இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகிய ஐடி விங் இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு பா.ஜ.க ஐடி பிரிவில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார் நிர்மல்குமார். அ.தி.மு.க ஐடி விங்கின் இணை செயலாளராக பணியாற்றிய சி.டி.ஆர்.நிர்மல்குமார் அப்பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.