மும்பையில் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி: தற்கொலைக்கு முயன்ற இளைஞரை மீட்ட பெண் காவலருக்குப் பாராட்டு!
மும்பை தாதர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புறநகர் ரயில் ஒன்று நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தபோது, ஒருவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.
அந்த ஆபத்தான தருணத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் ரயில்வே காவலர், சிறிதும் தாமதிக்காமல் விரைந்து சென்று அவரை இழுத்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உயிரைக் காப்பாற்றினார்.
இந்த வீரச் செயலால் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், அங்கிருந்த பயணிகள் பெண் காவலரின் தைரியத்தையும் விரைவான செயல்பாட்டையும் பாராட்டினர். இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ள நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர் தீவிர மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
🚨 A tragedy was narrowly averted at Mumbai's Dadar railway station after alert police personnel spotted a man trying to get beneath an approaching local train. They rushed in without hesitation and dragged him to safety in the nick of time, preventing a fatal accident. pic.twitter.com/Ksr9p5SXlh
— Kailash Vashi (@KailashVashi) August 2, 2026

