தனியார் ஹோட்டலுக்கு இட்லி விற்பனையா?- அம்மா உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
Jun 19, 2026, 16:45 IST1781867729000
அம்மா உணவகத்தில் தயாராகும் இட்லிகள் மொத்தமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து அம்மா உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அம்மா உணவகத்தில் இட்லிகள் தனியார் ஹோட்டலுக்கு விற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையிலம் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்ட கங்கா, சங்கரேஸ்வரி என்னும் இரு பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் இது போன்ற தவறுகள் நடக்காத வண்ணம் பார்க்க CCTV கேமரா பொருத்தப்பட்டது. மேலும் அம்மா உணவகத்தில் “இங்கு பார்சல் கிடையாது” என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

