சிசிடிஎன்எஸ் 2.0 சிக்கல்- தூங்குகிறதா தமிழக அரசு?

 
police

டிஜிட்டல் ஆட்சி, நவீன நிர்வாகம் என்று மேடைகளில் பெருமை பேசும் தமிழக அரசு, காவல்துறையின் அடிப்படை தொழில்நுட்ப தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் திணறுவது நிர்வாகத் தோல்வியின் வெளிப்படையான சான்றாக உள்ளது.

சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் சிக்கலால் காவல் நிலையங்களில் புகார் பதிவு, எப்ஐஆர் பதிவேற்றம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தாமதமடைகின்றன என்று காவல்துறையினரே வேதனையுடன் கூறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்தான். மக்கள் அவசரமாக காவல் நிலையத்தை நாடும் நேரத்தில், தொழில்நுட்ப கோளாறும், அரசின் அலட்சியமும் அவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

திட்டங்களை அறிவிப்பதில் காட்டும் வேகத்தை, அவற்றை செயல்படுத்துவதிலும் அரசு காட்ட வேண்டாமா? காவல்துறையினருக்கு தேவையான உபகரணங்கள், இணைய வசதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் சீரான செயல்பாட்டு சூழலை உடனடியாக ஏற்படுத்துவது அரசின் கடமை. அதில் தோல்வியடைந்த நிர்வாகம், விளம்பர அரசியலால் தனது பொறுப்பை மறைக்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பும், காவல்துறையின் செயல்திறனும் பாதிக்கப்படும் இந்த நிலைக்கு தமிழக அரசு உடனடியாக பொறுப்பேற்று, சிசிடிஎன்எஸ் 2.0 குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் "டிஜிட்டல் ஆட்சி" என்ற முழக்கம் வெறும் விளம்பர வாசகமாகவே மாறிவிடும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.