சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

 
சிபிஎஸ்இ +2  தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு..

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறியலாம்.

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ம்வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியாகின.   இதேபோல்  மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த  பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்  நடைபெற்றது.  நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதினர்.   இந்நிலையில் இன்று  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  முன்னதாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி தொடர்பாக குழப்பமான சூழல் இருந்துவந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் தேர்வு முடிவில் ,  ஒட்டுமொத்தமாக 87.33 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

cbse exams

இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதம்  83.40 % ஆக இருந்தது. அதைவிட இந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம்  அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம்  16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில்,  14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சியடைந்துள்ளதாக  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. குறிப்பாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவர்கள்  தேர்ச்சியடைந்துள்ளனர்.  சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்திருக்கிறது.