சிபிஎஸ்சி 10ம் வகுப்பு தேர்வு முடிவு : சென்னைக்கு 3வது இடம்..

 
CBSE Results


சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. திருவனந்தபுரம் மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வு  கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது.   நாடு முழுவதும் 6,759  தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத்தேர்வினை 16 லட்சத்திற்கும் மேற்பட்ட  மாணவர்கள்  எழுதினர்.  இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகியுள்ளன.  இதில் 12ம் வகுப்பு தேர்வில் ஒட்டுமொத்தமாக 87.33 சதவிகிதமான பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 cbse exams
அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்  93.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் (99.91%)  மண்டலம்  முதலிடம் பிடித்துள்ளது.  அதனைத்தொடர்ந்து  சென்னை 99. 14 % உடன் 3வது இடத்திலும் உள்ளது.  சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.