#BREAKING வரும் 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

 
விஜய் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 19ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.50,000 வாடகை, ரூ.50,000 டெபாசிட்- விஜய் கூட்டம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி

கரூர் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக தலைவர் விஜய்யிடம் நேற்று சிபிஐ முதற்கட்ட விசாரணை நடத்தியது. விஜய்க்கு 90 கேள்விகள் அடங்கிய ஒரு எழுத்துப்பூர்வ புத்தகப் படிவம் வழங்கப்பட்டது. அவர் அளித்த ஒவ்வொரு பதிலும் சிபிஐ ஸ்டெனோகிராபர் மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் விஜய் அவற்றை சரிபார்த்து கையொப்பமிட்டு உறுதி செய்தார்.

இதனையடுத்து விஜயிடம் இன்றும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேறு ஒரு நாளில் விசாரணை நடத்துமாறு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய கோரிக்கையை சிபிஐயும் ஏற்றது. இந்த நிலையில் விஜயிடம் வரும் 19ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்துகிறது சிபிஐ.