"கோடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" - ஈபிஎஸ் பேட்டி
Aug 30, 2023, 11:37 IST1693375635763
கோடநாடு வழக்கில் என் மீது திட்டமிட்டு திமுக அவதூறு பரப்புகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகை புரிந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவரை வரவேற்றார். அத்துடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார்,ராஜன் செல்லப்பா ஆகியோர் ஈபிஎஸ்-ஐ வரவேற்றனர்.