வி.வி.மினரல்ஸ் சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை!

 
vv

சென்னையில் உள்ள வி.வி. மினரல்ஸ் தலைமை அலுவலகம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

ரூ.5,832 கோடி மதிப்புள்ள சட்டவிரோத தாது மணல் சுரங்க ஊழல் தொடர்பாக, சென்னையில் உள்ள வி.வி. மினரல்ஸ் தலைமை அலுவலகம் உட்பட தமிழ்நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கினர். 

சென்னையில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனம், நெல்லை மாவட்டம் திசையன்விளை கீரைகாரன்தட்டுவில் அமைந்துள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் விசாரணை நடத்தினர்.  மேலும், அவரது சகோதரருக்கு சொந்தமான பி.எம்.சி நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீதிமன்ற உத்தரவு படி நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.