கரூர் நெரிசலுக்கும் செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு?- விஜயிடம் சிபிஐ கேள்வி
கரூர் கூட்ட நெரிசல் பிரச்சனைக்கும் செந்தில்பாலாஜிக்கும் என்ன தொடர்பு என தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜன.12 மற்றும் 19ம் தேதிகளில் நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இன்று மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது முறையாக விஜய் விசாரணைக்கு ஆஜரானார்.
கரூர் பெருந்துயரத்துக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் பிரச்சனைக்கும் செந்தில்பாலாஜிக்கும் என்ன தொடர்பு என தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ கேள்வி எழுப்பியுள்ளது. எதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது தவெக குற்றச்சாட்டை முன் வைக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2 முறை நடந்த விசாரணையில் விஜய் அளித்த பதில்களில் சிபிஐக்கு திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிறது.

