ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை - எல்.முருகன்

 
tt

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதே பாஜக கோரிக்கை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

dd

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் வன்முறைகள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம்,  தேசிய எஸ்சி ஆணையம் ஆகியவற்றில் புகாரளிக்க அளிக்கிறோம்.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாக இருக்கிறது.  ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நம் அனைவருக்கும் தெரியும்.   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வி சந்தித்துள்ளது . 

l murugan
ஆம்ஸ்ட்ராங் நகரின் மையப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.  சட்ட ஒழுங்கில் திமுக அரசு படு தோல்வியை சந்தித்துள்ளது.  திமுக ஆட்சியில் பட்டியல் இன தலைவர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏறக்குறைய 70 பேர் உயிரிழந்தனர். இதில் 40 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள்.  ராகுல் காந்தியும்,  மல்லிகார்ஜுனா கார்கே யாரும் அந்த மக்களை சந்திக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக வழி காட்டும்; விமான டிக்கெட் புக் செய்து கொடுக்கவும் தயாராக உள்ளது என்றார்.