கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜயிடம் சிபிஐ விசாரணை நிறைவடைந்தது.

டெல்லியில் சிபிஐ விசாரணை முடிந்ததும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு கையாசைத்துவிட்டு செல்கின்றார். சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்படும் போது, விஜய் காரில் இருந்து இறங்கி கையசைத்தார். விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை இத்துடன் நிறைவடைந்துவிட்டது. அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக எந்தவொரு சம்மனும் அவருக்கு வழங்கப்படவில்லை. இன்று மட்டும் விஜய்யிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 2025 செப். 27ல் கரூர் தவெக மாநாட்டில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றுவருகிறது. விஜய் ஜன. 19ல் இரண்டாவது முறை ஆஜரானார். ’
குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு, கைது என தவறான தகவல் வெளியிடப்படுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு தற்போது வரை அனுப்பப்பட்ட சம்மன் அடிப்படையிலான விசாரணை நிறைவு பெற்றதால் நாளை மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு விஜய் வரவேண்டியதில்லை.


