நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கியதில் அரசியல் பின்புலம்? - சிபிஐ விசாரணை

 
ranya

 
தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்ததாக கூறப்படும் வழக்கில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்கரகாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி பெங்களூரு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். மூன்று நாட்களுக்கு நடிகையை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகை ரன்யா ராவின் நிறுவனத்திற்கு கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் கடந்த 2023ல் 12 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியது. தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ரன்யா ராவுக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதில் அரசியல் பின்புலம் உள்ளதா? என சிபிஐ விசாரணை
 நடத்தி வருகிறது.