6.30 மணி நேரம்... 90 கேள்விகள்... விஜய்யிடம் விசாரணை நடத்திய சிபிஐ!
கரூர் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் எழுந்த முக்கிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் தெரிய வந்துள்ளன. ஜனவரி 12 அன்று டெல்லியில் சுமார் 6.30 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை முழுவதும் சட்டபூர்வ எழுத்துப்பூர்வ முறையில் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. சிபிஐ விசாரணை குறிப்பாக, விஜய்க்கு 90 கேள்விகள் அடங்கிய ஒரு எழுத்துப்பூர்வ புத்தகப் படிவம் வழங்கப்பட்டது. அவர் அளித்த ஒவ்வொரு பதிலும் சிபிஐ ஸ்டெனோகிராபர் மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் விஜய் அவற்றை சரிபார்த்து கையொப்பமிட்டு உறுதி செய்தார்.

1. தாமதம் குறித்து
CBI: கரூர் கூட்டத்திற்கு நீங்கள் திட்டமிட்ட நேரத்திற்கு தாமதமாக வந்தது ஏன்?
Vijay: அன்றைய பயண திட்டம் மற்றும் பாதுகாப்பு காரணமாக நேரம் மாறியதாக விளக்கம் அளித்தார்.
2. நேர இடைவெளி
CBI: கூட்டம் தொடங்க வேண்டிய நேரத்துக்கும், நீங்கள் வந்த நேரத்துக்கும் இடையிலான இடைவெளி என்ன?
Vijay: அந்த இடைவெளியை விளக்கி, அந்த காலகட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கட்சி நிர்வாகம் கையாண்டதாக தெரிவித்தார்.
3. கூட்டம் அதிகரித்ததா?
CBI: உங்கள் தாமதம் காரணமாக கூட்டம் அளவுக்கு மீறி அதிகரித்ததா?
Vijay: கூட்டம் அதிகரித்தது என்பதை ஒப்புக்கொண்டாலும், அதற்கான கூட்ட மேலாண்மை ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
4. கூட்ட கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்
CBI: நுழைவு, வெளியேறும் பாதைகள், தடுப்புகள், குடிநீர், மருத்துவ வசதிகள் யாரால் ஏற்பாடு செய்யப்பட்டது?
Vijay: இந்த ஏற்பாடுகள் தவெக மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து செய்யப்பட்டதாக பதிலளித்தார்.
5. போலீஸ் & மாவட்ட நிர்வாகம்
CBI: இந்த நிகழ்ச்சிக்கான போலீஸ் அனுமதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு யாரின் பொறுப்பு?
Vijay: அனைத்து அனுமதிகளும் கட்சி நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டதாக தெரிவித்தார்.
6. பிரச்சார வாகன இயக்கம்
CBI: உங்கள் பிரச்சார வாகனங்களின் நகர்வு கூட்ட நெரிசலை அதிகரித்ததா?
Vijay: வாகன இயக்கம் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் திட்டமிட்ட வழித்தடத்திலேயே நடந்ததாக கூறினார்.
7. நெரிசல் ஏற்பட்ட நேரம்
CBI: கூட்டநெரிசல் ஏற்பட்ட போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்? என்ன தகவல் கிடைத்தது?
Vijay: சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கட்சித் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார்.
8. அதே இரவு சென்னை புறப்பட்டது
CBI: சம்பவம் நடந்த அதே இரவே நீங்கள் சென்னை திரும்பியது ஏன்? அந்த முடிவு யாருடையது?
Vijay: பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஆலோசனையின் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக பதிலளித்தார்.
9. நிர்வாகப் பொறுப்பு
CBI: இந்த நிகழ்ச்சியின் முழு நிர்வாகப் பொறுப்பு யாருக்கு?
Vijay: நிகழ்ச்சி ஏற்பாடு தவெக நிர்வாகத்தின் கீழ் நடந்தது; ஆனால் அதிகாரப்பூர்வ அனுமதிகள் அரசு இயந்திரத்துடன் இணைந்து பெறப்பட்டன என்று தெரிவித்தார்.


