கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரம் : விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி போலீசார்!

 
tt

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியது. 

t

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டனர்.   கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 19 பேரும், சேலம் மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும் புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்தனர்.

tt

இந்நிலையில்  கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. விசாரணை அதிகாரியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான கோமதி, சென்னையில் இருந்து சென்ற டிஎஸ்பி சசிதரன் தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.