காவிரியில் தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் - காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

 
காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 31,571 கனஅடியாக குறைப்பு.. என்ன காரணம்?

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரை செய்துள்ளது.


தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு,கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அணைகளில் இருக்கும் நீரின் இருப்பு தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது.  காவிரி நீர் பிடிப்பு பகுதி்ளில் மழை மற்றும் அங்கிருக்க கூடிய சீதோஷ்ண நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரை செய்துள்ளது.