இன்று கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு.
Jul 30, 2024, 12:14 IST1722321872537

காவிரியில் இருந்து ஆகஸ்டு மாதத்திற்கு நீர் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவெடுக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு இன்று கூடுகிறது.
காலை 11.30 - மணிக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நடக்கும் 100-வது கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கடந்த 16-ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு மறுத்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக போதிய நீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஜுலை மாதத்திற்கான நீர் திறக்கப்பட்டு வந்தாலும் நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஆகஸ்டு மாதம் 45.95 டிஎம்சி தண்ணீர் வ கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிடும். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய நீர் பங்கீடு செய்வது குறித்து முடிவு செய்ய இன்றைய கூட்டம் நடக்கிறது.