காவிரி மேலாண்மை ஆணையம் மே 21ஆம் தேதி கூடுகிறது..!

 
1

எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் மே 21ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது. இந்நிலையில் வரும் மே 21 ஆம் தேதி 30 வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேறக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.