காவிரி விவகாரம்- உச்சநீதிமன்றத்தை நாட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

 
mks

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. 

Image

அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்ட நிபுணர்கள் கூட்டத்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விசிக சார்பில் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, மமக சார்பில் ஜவாஹிருல்லா, தவாக சார்பில் வேல்முருகன், கொமதேக சார்பில் ஈஸ்வரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், பாஜக சார்பில் கரு.நாகராஜன், முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பருவமழை சாதமாக உள்ளபோதும், தண்ணீரை திறந்துவிடாத கர்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூட்டத்தில் கூறிய முதல்வர் ஸ்டாலின், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது என்றும் கர்நாடக அரசின் செயலுக்கும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகவும் கூறினார்.

நாங்கள் அவருடைய இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்”- திருமாவளவன் பேட்டி! |  nakkheeran

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்பி, “தமிழ்நாட்டு மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் கர்நாடக அரசு ஈடுபடுகிறது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக, பிரதமரை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.

Image

இதேபோல் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்திற்கு தேவையான நீரை பெற்றிட அரசியல் மற்றும் சட்ட ரீதியாக இந்த திமுக அரசு அழுத்தம் தர வேண்டும். முழுமையாக இதை நீதிமன்றத்தின் மூலமாக தான் பெற முடியும். அதிமுக இதுபோன்ற பொதுவான விஷயங்களுக்காக உங்களுக்கு துணை நிற்கும் என கூறியுள்ளோம்” என்றார்.