காவிரி விவகாரம்- 12 எம்பிக்கள் மத்திய அமைச்சரை சந்திக்கின்றனர்

 
duraimurugan

தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகா வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும்‌ என வலியுறுத்தி, ஒன்றிய ஜல்‌ சக்தி அமைச்சர்‌ தலைமையில்‌ தமிழ்நாட்டின்‌ அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ நாளை (18.09.2023) கோரிக்கை மனு அளிக்கவுள்ளனர்.

duraimurugan

முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌, ஒன்றிய அரசின்‌ ஜல்‌ சக்தி துறை அமைச்சர்‌ கஜேந்திர சிங்‌ ஷெகாவத்‌தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர்‌ திரு.துரைமுருகன்‌‌ தலைமையில்‌ தமிழ்நாட்டின்‌ அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ அடங்கிய குழுவினருடன்‌ நாளை (18.09.2023) மாலை சந்தித்து கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள்‌ வழங்கிடக்‌ கோரி நேரில்‌ சந்தித்து வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்‌.

அதன்படி மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌ திரு.டி.ஆர்‌.பாலு (திமுக), செல்வி.எஸ்‌.ஜோதிமணி (இ.தே.கா), முனைவர்‌ மு.தம்பித்துரை மற்றும்‌ திரு.என்‌.சந்திரசேகரன்‌ (அ௫அதிமுக), திரு.கே.சுப்பராயன்‌ (சிபிஐ), திரு.பி.ஆர்‌.நடராசன்‌ (சிபிஎம்‌), திரு.வை.கோ. (மதிமுக), முனைவர்‌ தொல்‌ திருமாவளவன்‌ (விசிக), டாக்டர்‌ அன்புமணி ராமதாஸ்‌ (பாமக), திரு.ஜி.கே.வாசன்‌ (தமாகா), திரு.கே.நவாஸ்‌ கனி (இயூமுலீ) மற்றும்‌ திரு.ஏ.கே.பி. சின்னராஜ்‌ (கொமதேக) ஆகியோர்‌ மாண்புமிகு ஒன்றிய அரசின்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ அவர்களை சந்திக்க உள்ளனர்‌ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.