குவாரி வெடி விபத்திற்கான காரணம் - எப்ஐஆர் - ல் அதிர்ச்சி தகவல்!!

 
tn

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதி ஆவியூரில் இயங்கி வரும் கல்குவாரியில் வெடிபொருட்கள் வைத்திருந்த அறையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  இந்த விபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tn

இந்நிலையில் விருதுநகரில் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்துக்கான காரணம் குறித்து எப்ஐஆர்- இல் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெட்டனேட்டர், நைட்ரஜன் வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர்; உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் பாதுகாப்பற்ற முறையில் வெடிமருந்துகளைக் கையாண்டுள்ளனர் என்று  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.