கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணிக்கு நேர்ந்த சாதிய வன்கொடுமை

 
கர்ப்பிணி

கள்ளக்குறிச்சி அருகெ நிறைமாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சாதிய வன்கொடுமையால், வளைகாப்பு முடிந்த கையுடன் காவல்நிலையம் வந்து புகார் அளித்த கர்ப்பிணி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி | அரசு மருத்துவர் இல்லை., கர்ப்பிணி பெண் சிசுவுடன் பலி! -  Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா . இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கல்பனா கா்ப்பமானார். இதையடுத்து, அவருக்கு  அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. இதற்காக கல்பனா, வீட்டில் இருந்து மண்டபத்திற்கு புறப்பட்டபோது, அதே ஊரை சேர்ந்த வெங்கடேசனின் உறவினர் பிச்சன் மகன் செல்வம் என்பவர் அங்கு வந்து, கல்பனாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

அதுமட்டுமன்றி இவர்கள் திருமணம் கலப்பு திருமணம் என்பதால் திருமணம் நடைபெற்றதில் இருந்து செல்வம் கல்பனாவின் சாதியை கூறி தரக்குறைவாக பேசி வந்துள்ளார். வளைகாப்பு நிகழ்ச்சியிலும் உன் குழந்தை பிறந்ததால் தீட்டு எனக்கூறி நீ உன் அம்மா வீட்டிற்கு சென்று விடு இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வளைகாப்பு முடிந்த பின்னர், கல்பனா தனது கணவருடன் சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, செல்வம் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைகாப்பு முடிந்த உடனே, கர்ப்பிணி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.