அறிவாலயத்தில் சாதிய பாகுபாடு- தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வெளியில் நிற்பதாக Ex MLA குற்றச்சாட்டு
சென்னை அறிவாலயத்திற்குள் நுழைய பூச்சி முருகன் சாதி பார்த்து தடுப்பதாகவும், தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் வெளியில் நிற்பதாகவும் திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன் ஆவேசத்துடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை அறிவாலயத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாக திருத்துறைப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. ஆடலரசன் ஆவேசமாக குற்றஞ்சாட்டியுள்ளார். பூச்சி முருகன் சாதி பார்த்து தடுப்பதாகவும், தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் வெளியில் நிற்பதாகவும் ஆத்திரத்துடன் அவர் பகிர்ந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. 20 ஆண்டுகளாக கவுன்சிலராக இருக்கும் தன்னையும் அனுமதிக்கவில்லை என வேறொருவரும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க அனுமதி மறுப்பதாக குற்றஞ்சாட்டிய ஆடலரசன் நீண்ட சலசலப்புக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.


