அரசுப் பள்ளியில் சாதியப் பாகுபாடு-ஆசிரியர்கள் அறையில் மனிதக்கழிவு
Nov 23, 2026, 14:55 IST1795425953351
அரியலூர் மாவட்டம் கீழவெளி அரசுப் பள்ளியில் சாதியப் பாகுபாடு தலைதூக்கியதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது.
அரியலூர் மாவட்டம்கீழவெளி அரசுப் பள்ளியில் சாதிய பாகுபாடு காரணமாகத் பட்டியலின ஆசிரியர்களை தனிமைப்படுத்தி, அவர்களது அறையில் மனிதக் கழிவு வீசிய அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சாதிய பாகுபாடு புகார் எதிரொலியாக நடவடிக்கை எடுக்கக்கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

