’சண்டாளன்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்தில் சீமான் மீது பதிவு செய்யப்படாத நிலையில், குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ன் பட்டாபிராம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை வருகிற 2 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் சண்டாளன் என்ற சாதி பெயரை பயன்படுத்துவோர் மீது வட்ன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைத்து குறிப்பிடதக்கது.