சிறுவனிடம் மைக்கை கொடுத்து பேச வைத்ததாக புகார்- உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
தாராபுரம் பிரச்சாரத்தின்போது முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக சிறுவனை உதயநிதி ஸ்டாலின் பேச வைத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாராபுரம் பிரச்சாரத்தின்போது முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக சிறுவனை உதயநிதி ஸ்டாலின் பேச வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகளை பரப்புரையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் புகாரின் அடிப்படையில் தாராபுரம் காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாராபுரத்தில் சிறுவனிடம் மைக்கை கொடுத்து பேச வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. முதல்வர் விஜயை அவமானப்படுத்தும் விதமாக குழந்தையை வைத்து தேர்தல் பரப்புரை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

