பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு
திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த அரசு ஊழியரை காலில் விழ வைத்து வன்கொடுமை செய்த திமுக நகர மன்ற தலைவரின் கணவர், திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த அரசு ஊழியரரை காலில் விழ வைத்து வன்கொடுமை செய்த திமுக நகர மன்ற தலைவரின் கணவர் திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள்.
— சிவா (எ) செல்வக்குமார் SayYEStoWomenSafety&AIADMK (@admk_selva_) September 3, 2025
#ADMK_VNR pic.twitter.com/TAG2PjPMlD
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி இளநிலை உதவியாளரான பட்டியல் சமூக அலுவலரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக புகார் எழுந்தது. நகர்மன்ற தலைவரின் கணவர் தான் அதிகாரியை காலில் விழும் சூழலுக்கு தள்ளியதாக புகார் எழுந்த நிலையில், கவுன்சிலர் கூறியும் நிதி ஒதுக்குதல் தொடர்பாக கோப்பினை எடுத்து வரவில்லை என கூறி கட்டபஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. மன்னிப்பு கேட்டால் போதுமா? என கேட்டதால் காலில் விழுந்ததாக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியலின அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக பெண் கவுன்சிலர் ரம்யா, நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் நகர்மன்ற தலைவரின் கணவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியிருந்தனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த திண்டிவனம் போலீசார் ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

