10,11, 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தடை செய்க - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு..

 
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நாள்தோறும்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் , தினசரி பாதிப்பு  12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 5 ஆம் தேதி,  இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, 1 முதல் 9  வரை  மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 வரை விடுமுறை , வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்களில் பொதுமக்களுக்கு தடை உள்ளிட்ட  புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.

பள்ளி, கல்லூரிகள்

ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அப்துல் வஹாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கை உடனடியாக அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவிதுள்ளனர்.

online class

மேலும், இன்று  மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு  வருகிறது என்றும், அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகம்  முறையாக எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினர். அனைத்து விஷயங்களிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்தது.