சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 8 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். இவர் ஆரணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 2016-2021 அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சேவூர் கிராமத்தில் உள்ள எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சேவூர் ராமச்சந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வருமானத்தை விட 125% அதிகமாக சொத்து
சேர்த்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.


