கோவையைச் சேர்ந்த பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு!

 
tn

கடந்த 2 ஆம் தேதி கோவையில் சத்திரோடு சங்கனூர் சிக்னல் சந்திப்பில்   C1 காவல்நிலைய போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்துள்ளார். அப்போது கோவை பெண் ஓட்டுநராக வலம்வந்த இளம்பெண் ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு  செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் காவல் ஆய்வாளரை சர்மிளா கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

tn

இந்நிலையில் கோவையில் யூடியூப் மூலம் பிரபலமான பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

tnt

சத்திரோடு சிக்னல் சந்திப்பில் ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனை கேட்ட எஸ்.ஐ. ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.