பெரும் பரபரப்பு! சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

 
seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த பத்தாம் தேதி முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். 8 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற நிலையில், ஒரு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கூடுதல் நேரம் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.